search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கழிவுகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
    X
    மருத்துவ கழிவுகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

    கேரள மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்: தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

    கோவை எட்டிமடை அருகே கேரள மருத்துவ கழிவுகள் கொட்டியது தொடர்பாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை எட்டிமடை அருகே உள்ள நெல்லிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர் (வயது 75). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 லாரிகளில் கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மருத்துவ கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர்.

    பின்னர் இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் மற்றும் எட்டிமடை பஞ்சாயத்து அலுவலர் வளர்மதி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தோட்டத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செல்லப்பகவுண்டர் என்பவருடைய தோட்டத்தை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது.

    அவர் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டு வரும் கழிவுகளை இங்கு வந்து கொட்டி அதை தரம் பிரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் தோட்ட உரிமையாளர் செல்லப்பகவுண்டர் (75), கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது இலியாஸ் (57), கோழிக்கோட்டை சேர்ந்த சாஜி, கர்நாடகாவை சேர்ந்த சபீர் (55). ஆகியோர் மீது சுகாதார கேடு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து 24 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×