search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் 2-வது அணு உலையில் நீராவி சோதனை: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அறிவிப்பு
    X

    கூடங்குளம் 2-வது அணு உலையில் நீராவி சோதனை: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அறிவிப்பு

    கூடங்குளம் 2-வது அணு உலையில் நீராவி சோதனையின் போது அதிக சத்தம் உருவானது. இந்த சத்தத்தால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணுமின் நிலையம் கட்டப்பட்டது.

    முதல் அணுஉலையில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

    2-வது அணு உலையில் சோதனை அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது மின்சாரம் தயாரிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. “டர்பைன் வால்வு” பரிசோதனைக்காக நிறுத்தப்பட்ட 2-வது அணு உலை, நேற்று மாலை மீண்டும் இயக்கப்பட்டது.

    தற்போது படிப்படியாக மின்உற்பத்தி உயர்த்தப்பட்டு இன்று காலை நிலவரப்படி 2-வது அணுஉலையில் 380 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இன்று மதியம் ‘‘அட்மாஸ்பயர் டிஸ்சார்ஜ் வால்வ்’’ திறந்து சரியாக இயங்குகிறதா என்று விஞ்ஞானிகளும் என்ஜினீயர்களும் ஆய்வு செய்தனர். அப்போது உபரி நீராவி அதிக அளவில் வெளியேறியதால் அதிக சத்தம் உருவானது. இந்த சத்தத்தால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பயப்படத்தேவையில்லை என்று கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.

    மேலும் அவர், ‘இந்த பரிசோதனை முடிந்ததும் 2-வது அணுஉலையில் மின்சார உற்பத்தியை 500 மெகா வாட்டாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் 700 மெகா வாட், 800 மெகாவாட் என்று படிப் படியாக உயர்த்தி 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்’ என்றார்.
    Next Story
    ×