search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தது
    X

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தது

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் இன்று காலை பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. கோடை வெயிலுக்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    இதையடுத்து கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 11-ந் தேதி தண்ணீர் திறந்துவிடபட்டது. முதலில் 200 கனஅடி வீதம் திறந்துவிட்டனர். பின்னர் படிப்படியாக தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 800 கனஅடியாக திறக்கப்படுகிறது.

    கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று முன்தினம் மாலை தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது.

    இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தது. ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 80 கனஅடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 35 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி 17.50 அடி தண்ணீர் மட்டம் உள்ளது. வெறும் 87 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலமாக 39 கனஅடியும், பேபி கால்வாய் மூலமாக 25 கனஅடியும் என மொத்தம் 64 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×