search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது
    X

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது

    தீபாவளியையொட்டி, சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை தொடங்கியது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வந்தது. இங்கு சுமார் 58 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது.

    பட்டாசு விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இந்த விழாவில் சினிமா இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா நகைச்சுவை நடிகர்கள் சின்னி ஜெயந்த், கணேஷ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில், வசந்தம் பயிற்சி பள்ளியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.


    விழாவில் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் கம்பி மத்தாப்பூ கொளுத்தி மகிழ்ந்த காட்சி.


    பட்டாசு விற்பனை குறித்து த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், “இங்கு மிகவும் பாதுகாப்பான வகையில் தரமான சிவகாசி பட்டாசுகளே விற்பனை செய்யப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதிக அமிலத்தன்மை கொண்ட சீனப்பட்டாசுகளை யாரும் வாங்க வேண்டாம்”, என்றார்.

    “தீவுத்திடலில் அமைக்கப்பட்ட கடைகள் தினமும் இரவு 10 மணி வரை செயல்படும். தீபாவளிக்கு முன்தினம் 28-ந் தேதி முழுநேரம் செயல்படும். பாதுகாப்பு கருதி தீயணைப்பு படை வாகனம் தயார் நிலையில் உள்ளது. 8 வாயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30-ந் தேதி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடக்கும்”, என்று சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் பொது நல சங்க இணைச்செயலாளர் அப்துல்ரகுமான், காப்பாளர் புனிதன் ஆகியோர் தெரிவித்தனர்.
    Next Story
    ×