search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் தொழில் நுட்ப குழுவினர் நாளை ஆய்வு
    X

    மேட்டூர் அணையில் தொழில் நுட்ப குழுவினர் நாளை ஆய்வு

    காவிரி தொழில் நுட்பக்குழுவினர் இன்று இரவு சேலத்திற்கு வருகிறார்கள். சேலத்தில் இரவில் தங்கும் அவர்கள் நாளை (9-ந் தேதி) காலை 11 மணிக்கு மேட்டூர் சென்று மேட்டூர் அணை மற்றும் அங்குள்ள நீர்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள்.
    மேட்டூர்:

    கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து தமிழக-கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

    மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் மசூத் ஊசேன், ஆர்.கே.குப்தா மற்றும் மாநில தலைமை பொறியாளர்கள் 13 பேர் கொண்ட உயர்நிலை தொழில் நுட்ப சிறப்பு குழுவினரை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த குழுவினர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூர், மலவள்ளி வட்டங்களில் உள்ள ஏரிகளை பார்வையிட்டனர். 2-வது நாளான இன்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேமாவதி அணைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

    இந்த நிலையில் காவிரி தொழில் நுட்பக்குழுவினர் இன்று இரவு சேலத்திற்கு வருகிறார்கள். சேலத்தில் இரவில் தங்கும் அவர்கள் நாளை (9-ந் தேதி) காலை 11 மணிக்கு மேட்டூர் சென்று மேட்டூர் அணை மற்றும் அங்குள்ள நீர்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காவிரி தொழில் நுட்பக்குழு வருகையை யொட்டி மேட்டூர் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், அணைக்கு வரும் நீர்வரத்து, நீர் திறப்பு மற்றும் இருப்பு ஆகியவற்றை தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    கர்நாடகம் முறையாக தண்ணீர் வழங்காததால் தமிழக விவசயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இதனால் முறையாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து காவிரி தொழில் நுட்பக்குழுவிடம் மனு கொடுக்கவும் தமிழக விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2718 கன அடியாக இருந்த நீர்வரத்து முற்றிலும் சரிந்து இன்று 715 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி நேற்று 73.04 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71.94 அடியாக சரிந்தது.
    Next Story
    ×