search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வின் 2வது பட்டியல் வெளியீடு
    X

    உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வின் 2வது பட்டியல் வெளியீடு

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் 2வது கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வின் 2வது கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அக்கட்சியின் திருப்பூர், வேலூர் மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன.  திருப்பூர் மாநகராட்சியில் 50 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.  தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் 10 வார்டுகளில் போட்டியிடுகின்றன.  

    காங்கிரஸ் கட்சி 7 வார்டுகளில் போட்டியிடுகிறது.  மனிதநேய மக்கள் கட்சி 43வது வார்டில் போட்டியிடுகிறது.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 15வது வார்டில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறது.  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 45வது வார்டில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×