search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,600 ஆக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,600 ஆக உள்ளது.

    சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 832 ஆக இருந்தது.

    மறுநாள் 24-ந்தேதி பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 880-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது. நேற்று பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.23 ஆயிரத்து 784 ஆக இருந்தது.

    இன்று மேலும் பவுனுக்கு ரூ.184 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 600 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,950-க்கு விற்கிறது.

    சர்வதேச சந்தை நிலவரம், மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பாலும் தங்கம் விலை குறைவதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.925 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.45 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.48,80-க்கு விற்கிறது.
    Next Story
    ×