search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது: நீர்மட்டம் 81.47 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது: நீர்மட்டம் 81.47 அடியாக குறைந்தது

    கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.

    கடந்த 24-ந்தேதி அன்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,861 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று காலையில் விநாடிக்கு 796 கன அடியாக சரிந்தது. மேலும், நீர்வரத்து சரிந்து இன்று காலை 8 மணி அளவில் விநாடிக்கு 692 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 20-ந்தேதி சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடும்போது அணையின் நீர்மட்டம் 87.98 அடியாக இருந்தது.

    தற்போது, நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டதால், நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி வீதம் குறைந்து வருகிறது. நேற்று காலையில், நீர்மட்டம் 82.44 அடியாக இருந்தது. இன்று காலையில் 81.47 அடியாக குறைந்தது.
    Next Story
    ×