search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்துக்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக கூறுவதா?: மு.க.ஸ்டாலினுக்கு, தமீமுன் அன்சாரி கண்டனம்
    X

    இந்துக்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக கூறுவதா?: மு.க.ஸ்டாலினுக்கு, தமீமுன் அன்சாரி கண்டனம்

    இந்துக்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக கூறிய மு.க.ஸ்டாலினுக்கு தமீமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே நீடூர்-நெய்வாசல் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் இக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. வுமான தமீம்முன்அன்சாரி கலந்துகொண்டு பேசினார்.

    இந்து முன்னணி செய்திதொடர்பாளர் படுகொலை சம்பவத்தை மனிதநேய ஜனநாயகட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பாட்டாளிமக்கள் கட்சிதலைவர் ராமதாஸ், விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆனால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடையை சூறையாடியதையும், பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டதை கூறி உள்ளார். பள்ளிவாசல்மீது கல்வீசியதை கூறவில்லை. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியது ஏற்புடையதல்ல.

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதியிலும் நம்கட்சியின் கொடிபறக்க வேண்டும். வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் மாலீக், நகர செயலாளர் முகமது யாசர் அரபாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்டத்தை ஹாலமாதர் மிஷ்பாஹீ தொடங்கி வைத்தார். மாநில அவைத்தலைவர் நாசர்உம்ரீ சிறப்புரையாற்றினார். இதில் அபுசாலி சாகுல் அமது, ஜப்ரூதின், ரியாத் அகமது, முகமது பாருக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×