search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
    X

    நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

    நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம், பிக்அப் வாகனத்தை மறித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இன்று காலை ஈடுபட்டனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம், பிக்அப் வாகனத்தை மறித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இன்று காலை ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நியூ சர்போஸ் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 208 தொழிலாளர்கள், லிக்னைட் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 52 தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பணி நாட்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் 7 தினங்கள் குறைப்பதற்கான நடவடிக்கையை சுரங்க நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதைஅறிந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இன்று காலை முதலாவது (ஷிப்ட்)பணிக்கு சென்றவர்கள் பணிகள் ஏதும் செய்யாமல், உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மனித வளத்துறை பொது மேலாளர் ஞானசேகரன், அங்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    பிரச்சினை குறித்து சுரங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், பின்னர் பணிநாட்கள் தொடர்பான வி‌ஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தினை கைவிட்டனர்.

    இதனால் இன்று காலை இரண்டாவது சுரங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×