search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் கேப்டன் பதவிக்காலம்: கேள்வி எழுப்புகிறார் ஸ்மித்
    X

    விராட் கோலியின் கேப்டன் பதவிக்காலம்: கேள்வி எழுப்புகிறார் ஸ்மித்

    விராட் கோலி இந்தியாவிற்கான நீண்ட நாள் கேப்டனுக்கான நபரா? என்பது எனக்குத் தெரியாது என ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். #SavIND #viratKohli #GraemeSmith
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து இந்தியா தொடரை இழந்துள்ளது.

    3-வது மற்றும் கடைசி போட்டி நாளை ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்த வரலாற்றை மாற்றி வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய விரும்புகிறது.

    இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற பிறகு இந்தியா தோற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும. இவருக்கு முன்பு இருந்த டோனி கூல் கேப்டன் என்ற பெயரெடுத்தவர். ஆனால் விராட் கோலி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், ஆக்ரோஷமான கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார்.

    இப்படி செயல்பட்டால் வீரர்களுக்கு இடையில் பிரச்சினை உருவாகும். இதனால் விராட் கோலி இந்திய அணிக்கான நீண்ட நாள் கேப்டனாக நீடிப்பாரா? என்றால் எனக்குத் தெரியாது என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

    விராட் கோலி கேப்டன் பதவி குறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘விராட் கோலியின் செயலைப் பார்க்கும்போது, இந்திய அணியின் நீண்ட நாள் கேப்டனுக்கான நபரா? என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது விராட் கோலி நெருக்கடிக்கு உள்ளாவார் என்று பத்திரிகைகள் எழுதி வந்தன.



    இந்தியாவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடும், வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் என்பதை என்பது எனக்குத் தெரியும். விராட் கோலியை இந்த நிலைமைக்கு தள்ள வேண்டுமா? அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப இந்தியா சிறந்த கேப்டனை உருவாக்குமா? என்பது எனக்குத் தெரியவில்லை.

    விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அவருடைய தீவிரமான ஆக்ரோசம் அவருடைய தனிப்பட்ட கிரிக்கெட்டிற்கு சிறந்த வகையில வழிவகுக்கும். ஆக்ரோசத்தை அவர் விரும்புகிறார். அந்த தீவிரம் அவரை சிறந்த பேட்ஸ்மேனாக கொண்டு செல்லும்.

    சில நேரங்களில் இதுபோன்ற செயல்பாடு மற்ற வீரர்களை எப்படி பாதிக்கும் என்பதை ஒரு கேப்டனாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் விராட் கோலி இன்னும் வளர வேண்டும்.



    சூழ்நிலைக்கு ஏற்றபடி அடிக்கடி விராட் கோலி எதிர்விணை ஆற்றுகிறார். சில நேரங்களில் இது வீரர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்திய கிரிக்கெட் மற்றும் உலகக் கிரிக்கெட்டில் எவ்வளவு வலுவான வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தனக்கான ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கி, அந்த இலக்கை எட்டிய பிறகு அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைக்க முடியும்.’’ என்றார்.

    செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 153 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். வீரர்கள் ஆட்டமிழக்க இழக்க விராட் கோலி மிகவும் விரக்தி அடைந்தார். அப்போது சக வீரர்களிடம் அடிக்க உரையாற்றினார். அப்போது வீரர்களின் ஷாட் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். இக்கட்டான நிலையில் விராட் கோலியின் இந்த எதிர்விணை சக வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத்தான் ஸ்மித் கூறியுள்ளார்.
    Next Story
    ×