search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வீடன் ஓபன் ஜூனியர் பேட்மிண்டன்: இந்தியாவின் சித்தார்த் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்
    X

    ஸ்வீடன் ஓபன் ஜூனியர் பேட்மிண்டன்: இந்தியாவின் சித்தார்த் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்

    ஸ்வீடனில் நடைபெற்ற ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சிங் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் ராய்ப்பூரை சேர்ந்த சித்தார்த் பிரதாப் சிங் என்ற 19 வயது பேட்மிண்டன் வீரர் ஸ்வீடனில் நடைபெற்ற ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டார்.

    இறுதி சுற்று வரை முன்னேறிய சித்தார்த், சாம்பியன் பட்டத்திற்கான ஆட்டத்தில் டென்மார்க்கின் மட்ஸ் கிரிஸ்டோபெர்சனை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-1 என்ற நேர் செட் கணக்கில் சித்தார்த் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். சித்தார்த் பெறும் முதல் சர்வதேச அளவிலான பட்டம் இதுவாகும்.

    இதையடுத்து சித்தார்த் ஐஸ்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இப்போட்டி இந்த மாதம் 25 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    Next Story
    ×