search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், பிளிஸ்கோவா காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், பிளிஸ்கோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஹாலெப், பிளிஸ்கோவா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறினர். #AusOpen #SimonaHalep #Pliskova
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாலெப் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஹாலெப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, சக நாட்டு வீராங்கனையான பார்போரா ஸ்டிரைகோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை 6-7 என ஸ்டிரைகோவா கைப்பற்றினார். அதன்பின் கவனமாக விளையாடிய பிளிஸ்கோவா அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற பிளிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் மார்ட்டினா கீஸ் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நாளை காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. #AusOpen #SimonaHalep #Pliskova
    Next Story
    ×