search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு போபண்ணா - பாபோஸ் ஜோடி முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலியா ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு போபண்ணா - பாபோஸ் ஜோடி முன்னேற்றம்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #AUSOPEN #AustralianOpen
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் எல்லென் பெரெஸ் - அண்ட்ரூ வைடிங்டன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

    இப்போட்டியின் முதல் செட்டை போபண்ணா - பாபோஸ் ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றியது. இதன்மூலம் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபண்ணா - பாபோஸ் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்ததாக 23-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, அமெரிக்காவின் வனியா கிங் - குரோசியாவின் பிரான்கோ ஸ்கூகார் ஜோடியை எதிர்கொள்ள இருக்கிறது. #AUSOPEN #AustralianOpen
    Next Story
    ×