search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டி 3-1 என நியூகேஸ்டில் யுனைடெட் அணியை வீழ்த்தியது
    X

    பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டி 3-1 என நியூகேஸ்டில் யுனைடெட் அணியை வீழ்த்தியது

    பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணிக்கெதிரான தோல்வியில் இருந்து மீண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி. #PremierLeague #SergioAguero #Mancity #MCFC
    பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வியை சந்திக்காமல் சென்று கொண்டிருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற லிவர்பூல் அணிக்கெதிரான ஆட்டத்தில் 3-4 என தோல்வியடைந்தது. இந்த சீசனில் இதுதான் அந்த அணியின் முதல் தோல்வியாகும்.

    இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற நியூகேஸ்டில் யுனைடெட் அணிக்கெதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மைதானமான எத்திகாட் மைதானத்தில் விளையாடியது. மான்செஸ்டர் சிட்டி அணியின் செர்ஜியோ அகியுரோ ஹாட்ரிக் கோல் அடிக்க  3-1 என வெற்றி பெற்றது.



    ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கெவின் டி ப்ருயின் கொடுத்த பந்தை கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதையும் கோலாக மாற்றினார். 67-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் யுனைடெட் அணியின் ஜேக்கப் மர்பி கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 83-வது நமிடத்தில் லெரோ சானே கொடுத்த பந்தை செர்ஜியோ கோலாக மாற்றினார். இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 65 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட் 53 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செல்சியா 50 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.



    நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அர்சனல், லெய்செஸ்டர், ஸ்டோக், செல்சியா அணிகள் வெற்றி பெற்றன. #PremierLeague #Mancity #MCFC
    Next Story
    ×