search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு நாடுகள் ஹாக்கி இறுதி ஆட்டம் முதல் லெக்: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா
    X

    நான்கு நாடுகள் ஹாக்கி இறுதி ஆட்டம் முதல் லெக்: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

    நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நான்கு நாடுகள் ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டம் முதல் லெக்கில் பெல்ஜியத்திடம் 1-2 என வீழ்ந்தது இந்தியா.
    இந்தியா, நியூசிலாந்து, பெல்ஜியம், ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஜப்பான் அணியை வீழ்த்தியிருந்தது. பெல்ஜியத்திடம் தோல்வியை சந்தித்திருந்தது.

    இன்று நடைபெற்ற இறுதி ஆட்டம் முதல் லெக்கில் பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் கோல் அடித்து இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்த சில நொடிகளில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. தில்ப்ரீத் சிங் கோல் எல்லையை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் பெல்ஜியம் தடுப்பாட்டக்காரர்கள் அதை எளிதாக தடுத்து விட்டனர்.



    ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார். இதனால் 1-1 என ஸ்கோர் சமநிலை ஆனது. ஆனால் 36-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் செபஸ்டியன் டாக்கியர் கோல் அடிக்க இந்தியா 1-2 எனத் தோல்வியை சந்தித்தது. இந்தியா இறுதி ஆட்டம் 2-வது லெக்கில் நியூசிலாந்தை 24-ந்தேதி எதிர்கொள்கிறது. #FourNationsInvitationaltournament
    Next Story
    ×