search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸி., இங்கிலாந்து, நியூசி., தென்ஆப்பிரிக்கா மண்ணில் மோசமான நிலையில் இந்தியா
    X

    ஆஸி., இங்கிலாந்து, நியூசி., தென்ஆப்பிரிக்கா மண்ணில் மோசமான நிலையில் இந்தியா

    2011-ல் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா மண்ணில் 24 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது இந்தியா. #SAvIND #viratKohli
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. வருகிற 24-ந்தேதி 3-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.



    இந்திய அணி தொடரை இழந்துள்ளதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இந்திய அணிக்கு இது புதிதல்ல. கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரில் இருந்து தற்போது வரை இந்தியா ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மண்ணில் ஒரு 7 தொடர்களை இழந்துள்ளது.



    2015-ம் ஆண்டு முதல் தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன்புவரை வெஸ்ட் இண்டீசைத் தவிர ஆசியக் கண்டத்தில் இந்தியா தொடர்ந்து 9 தொடர்களை கைப்பற்றியிருந்தது. அப்போது 21 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்தியா, 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தது.



    ஆனால் 2010-11-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என டிரா செய்தது. அதனோடு சேர்ந்து தற்போது வரை 24 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. ஆனால் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 4 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இது மிகவும் மோசமான சாதனையாகும்.



    இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தான் 14 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இலங்கை 21 போட்டிகளில் 2 வெற்றி, 15 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தியா 24 போட்டிகளில் 1 வெற்றி, 17 தோல்விகளை சந்தித்துள்ளது. வெற்றி ரேசியோவில் இந்தியா 0.06 ஆகவும், இலங்கை 0.13 ஆகவும், பாகிஸ்தான் 0.30 ஆகவும் உள்ளது.



    இந்திய பேட்ஸ்மேன்களில் ரகானே மட்டுமே ஆசிய கண்டத்தை விட இந்த நான்குநாடுகளில் சராசரி அதிகமாக வைத்துள்ளார். ரகானே ஆசியக் கண்டத்தில் 43.64 சராசரி வைத்துள்ளார். ஆனால் வெளிநாடுகளில் 48.59 வைத்துள்ளார். மற்றவர்கள் மைனசில் உள்ளனர்.



    இதில் புஜாரா மிகவும் மோசமாக உள்ளார். ஆசியக் கண்டத்தில் 59.56 வைத்துள்ள புஜாரா வெளிநாட்டில் 28.06 மட்டுமே வைத்துள்ளார். #SAvIND #viratKohli #RahitSharma #Rahane
    Next Story
    ×