search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹெலப், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு தகுதி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹெலப், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு தகுதி

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹெலப், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #Australianopen #Mensdoubles

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டேவிசை எதிர்கொண்டார்.

    இதில் ஹெலப் 4-6, 6-4, 15-13 என்ற கணக்கில் போராடி வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசுவை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா- லுசி ‌ஷபரோவா மோதினார்கள். இதில் 6-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவா 7-6 (8-6), 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு 3-வது சுற்று ஆட்டத்தில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) வெற்றி பெற்றார். அவர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ருமேனியாவை சேர்ந்த போக்டனை வீழ்த்தினார். #Australianopen #Mensdoubles #Helaba  #pliskova

    Next Story
    ×