search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமனம்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமனம்

    2018 - ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். #IPLauction #Balaji

    சென்னை:

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இதில் விளையாடுகின்றன.

    முதல் 8 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை இந்த சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக்கொண்டது. ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ மூலம் மேலும் 2 வீரர்களை எடுக்கலாம்.

    அஸ்வினை இதன்மூலம் எடுக்க முயற்சிக்கும். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்களையும் ஏலத்தில் எடுக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கனவே பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை அணிக்கு பயிற்சி அளித்த அவர் கடந்த 2 சீசனில் புனே அணியின் பயிற்சியாளராக இருந்தார். இதேபோல சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்சி ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தார். பிளமிங்கும், மைக் ஹஸ்சியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர்கள்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரான சென்னையை சேர்ந்த அவர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.

    எல்.பாலாஜி ஆரம்பகால சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். தற்போது அந்த அணிக்கே பந்துவீச்சு பயிற்சியாளராக வந்துள்ளார்.

    இதுகுறித்து எல்.பாலாஜி கூறும்போது, சி.எஸ்.கே.க்கு மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரராக அந்த அணிக்கு நுழைந்தேன். தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக செல்கிறேன்.

    இதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கு கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் வீரர்களை மேம்படுத்துகிறது என்றார். #IPLauction #Balaji

    Next Story
    ×