search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 15 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 15 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

    பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5-0 என கைப்பற்றியது. #NZvPAK #PAKvNZ

    வெல்லிங்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டியில் முதல் 4 ஆட்டத்திலும் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது ஒருநாள் ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 100 ரன்னும், டெய்லர் 59 ரன்னும், முன்ரோ 34 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 22 ரன்னும் எடுத்தனர். ருமான் ரயிஸ் 3 விக்கெட்டும், பகிம் அஷ்ரப் 2 விக்கெட்டும், ஆமிர் யாமின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி, 49 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல் 63 ரன்களும், பந்து வீச்சாளரான ஷதப் கான் 54 ரன்களும் எடுத்தனர். மேட் ஹென்றி 4 விக்கெட்டை வீழ்த்தினார். மிச்செல் சந்தர் 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.



    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. அடுத்ததாக டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி வருகிற 22-ம் தேதி, வெல்லிங்டன் மைதானத்தில் நடக்கிறது. #NZvPAK #PAKvNZ
    Next Story
    ×