search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிருபரின் கேள்வியால் விராட் கோலி கோபம்
    X

    நிருபரின் கேள்வியால் விராட் கோலி கோபம்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். #SAvIND #ViratKohli #Kohli
    தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் இந்திய அணியில் செய்த மாற்றங்களால் பலன் இல்லையே? என்று கேட்டார். இதனால் விராட் கோலி கோபம் அடைந்தார். பதட்டம் அடைந்த அவர் நான் இங்கு பதிலளிக்க வந்துள்ளேன். சண்டையிட வரவில்லை என்றார். இதுகுறித்து விராட் கோலி மேலும் கூறியதாவது:-

    போட்டியின் முடிவை வைத்து ஒரு அணியை மதிப்பிடக்கூடாது. நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் இது தான் சிறந்த அணி என்று சொல்லி இருப்பீர்களா? சிறந்த 11 வீரர்கள் யார்? என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களை விளையாட வைக்கிறோம்.

    34 டெஸ்டில் நாங்கள் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கிறோம். 21-ல் வெற்றி பெற்று உள்ளோம். இரண்டில் தோற்றோம். எத்தனை ‘டிரா’ செய்து இருக்கிறோம் என்பது எல்லாம் ஒரு வி‌ஷயமல்ல. நாங்கள் இங்கு சிறப்பாக விளையாடவே வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு கோலி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் ரகானேயை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மாவுக்கு முன்னுரிமை கொடுத்தார். 2-வது டெஸ்டில் 3 மாற்றம் செய்தார். தவான், விருத்திமான் சகா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக ராகுல், பார்த்தீவ் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த டெஸ்டில் ரகானே சேர்க்கப்படாதது குறித்து விமர்சிக்கப்பட்டது. அதோடு புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.  #SAvIND #ViratKohli #Kohli
    Next Story
    ×