search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U19 உலக்கோப்பை: ஆஸி., நியூசி., தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி
    X

    U19 உலக்கோப்பை: ஆஸி., நியூசி., தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி

    U19 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. #U19cwc #U19worldCup
    நியூசிலாந்தில் U19 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

    ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் - இலங்கை அணி மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 38 ஓவரில் 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    மற்றொரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 134 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து - கென்யா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 436 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய கென்யா 50 ஓவர் தாக்குப்பிடித்து 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 206 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #U19cwc #U19worldCup
    Next Story
    ×