search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை: இந்தியா 2-வது வெற்றி
    X

    ஜூனியர் உலக கோப்பை: இந்தியா 2-வது வெற்றி

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூகினியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா 2-வது வெற்றி பெற்றது. #U19CWC #INDvPNG
    19 வயதுக்குட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது. இன்று 2-வது ஆட்டத்தில் பப்புவா நியூகினியாவுடன் இந்தியா மோதியது.

    டாஸ் ஜெயித்த இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய இளம் வீரர்கள் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பப்புவா நியூகினியா 21.5 ஓவரில் 64 ரன்னில் சுருண்டது. ராய் 5 விக்கெட்டும், ஷிலம் மாலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து விளையாடிய இந்தியா 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் பிரித்விஷா 39 பந்தில் 59 ரன் (12 பவுண்டரி) எடுத்தார். இந்தியா பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.  #U19CWC #INDvPNG
    Next Story
    ×