search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
    X

    பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 153 ரன்கள் எடுத்ததன் மூலம் கேப்டன் பதவியில் டான் பிராட்மேன் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். #SAvIND #ViratKohli #CenturionTest
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் தனது 21-வது சதத்தை பதிவு செய்தார்.

    விராட் கோலி 217 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 153 ரன்கள் குவித்தார். கேப்டன் பதவியில் அவர் 8-வது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் சகாப்தமான டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) சாதனையை கோலி சமன் செய்தார். தனது 65-வது டெஸ்டில் இதை செய்தார். பிராட்மேன் ஒட்டு மொத்தமாக 9 முறை 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். கேப்டன் பதவியில் 8 முறை எடுத்துள்ளார்.

    மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), சுமித் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் தலா 7 தடவை கேப்டன் பதவியில் 150 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர். மேலும் செஞ்சூரியன் மைதானத்தில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு இந்த மைதானத்தில் டோனி கேப்டன் பதவியில் 90 ரன் (2010) எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த 2-வது ஆசிய கேப்டன் கோலி ஆவார். இதற்கு முன்பு தெண்டுல்கர் 1997-ம் ஆண்டு கேப்டவுன் மைதானத்தில் கேப்டனாக இருந்த போது 169 ரன் குவித்தார். ஒட்டு மொத்தமாக அவர் தென்ஆப்பிரிக்காவில் 5 சதம் அடித்துள்ளார். கோலி 2 செஞ்சூரி எடுத்துள்ளார். #SAvIND #ViratKohli #CenturionTest
    Next Story
    ×