search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு: பும்ரா
    X

    செஞ்சூரியன் டெஸ்ட் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு: பும்ரா

    செஞ்சூரியனில் நடைபெற்றும் வரும் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு என வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். #CenturionTest #SAvIND #Bumrah
    செஞ்சூரியன்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன் எடுத்தது. இது தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோரைவிட 28 ரன் குறைவாகும். கேப்டன் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 153 ரன்கள் குவித்தார். மார்னே மார்கல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. மர்கிராம், ஹசிம் அம்லா ஆகியோர் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தனர். டிவில்லியம்ஸ் 50 ரன்னும், எல்கர் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.



    தென் ஆப்பிரிக்கா அணி 118 ரன்கள் முன்னிலை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இருக்கிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    2-வது இன்னிங்சில் 2 விக்கெட் கைப்பற்றிய பும்ரா இந்த டெஸ்ட குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    2-வது டெஸ்ட் போட்டி தற்போது இரு அணிகளுக்கும் சம வாய்ப்பில் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் ஆட்டம் கை கொடுக்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம். ஒரு குழுவாக இருந்து நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம்.

    எனது பந்துவீச்சில் டீன் எல்கரின் கேட்சை விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் தவற விட்டதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதுபோன்று ஆட்டத்தில் நடப்பது சகஜம்.

    விராட் கோலி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. அவர் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பி கொண்டு வந்தார். எனக்கு தொடக்கத்திலேயே பந்துவீச அனுமதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. #CenturionTest #SAvIND #Bumrah
    Next Story
    ×