search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் ஆட்டம் பாதிப்பு: 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 90-2
    X

    மழையால் ஆட்டம் பாதிப்பு: 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 90-2

    மழையால் ஆட்டம் பாதிப்பு அடைந்ததால் 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #ViratKohli #DeVilliers
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலியின் அபார சதத்தால் 307 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 153 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.

    28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பும்ராவின் பந்து வீச்சு தொடக்கில் அனல் பறக்கும்படியாக இருந்தது.

    பும்ராவின் பந்து வீச்சில் மார்கிராம் (1 ரன்), அம்லா (1 ரன்), அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்கள்.

    முதல் 3 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்து தென்ஆப்பிரிக்கா திணறியது. 3-வது விக்கெட்டுக்கு டீன் எல்கருடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    தென்ஆப்பிரிக்கா அணி 23.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அதன்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்தார்.



    29-வது ஓவர் முடிந்த நிலையில் வெளிச்சமின்மை காரணத்தால் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

    அத்துடன் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது வரை தென்ஆப்பிரிக்கா 118 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    Next Story
    ×