search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு பிளாஸ்டர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு பிளாஸ்டர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. #VodafonePBL #HyderabadHunters #AhmedabadSmashMasters

    ஐதராபாத்:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கடைசி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சும் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரு அணியின் சாங் வெய் பெங், அகமதாபாத் அணியின் சவுரப் வெர்மாவை எதிர்கொண்டார். இதில் சவுரப் வெர்மா, 15-2, 14-15, 15-10 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.



    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூருவின் விக்டர் அலெக்சன், அகமதாபாத்தின் எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் மோதினர். இதில் விக்டர் அலெக்சன், 15-11, 15-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கிறிஸ்டி கில்மோர், அகமதாபாத் அணியின் தாய் ச்சூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியை அகமதாபாத் அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் 8-15, 15-13, 15-8 என்ற செட்களில் தாய் ச்சூ யிங் வென்றார்.



    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்சின் மேத்தியாஸ் போ - கிம் சா ரங் ஜோடி, அகமதாபாத்தின் நந்தகோபால் - லீ ரெஜினால்டு ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்தது. இதில் 15-13, 15-12 என்ற நேர் செட்களில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் பெங்களூரு அணியின் கிம் சா ரங் - சிக்கி ரெட்டி ஜோடி, அகமதாபாத் அணியின் லா சியூக் ஹிம் - கமீலா ரைட்டெர் ஜூல் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 15-12, 13-15, 15-9 என்ற செட் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இறுதியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஐதராபாத் ஹண்டர்ஸ் - பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. #VodafonePBL #HyderabadHunters #BengaluruBlasters
    Next Story
    ×