search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியனில் அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்த வாய்ப்புள்ளது: இர்பான் பதான்
    X

    செஞ்சூரியனில் அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்த வாய்ப்புள்ளது: இர்பான் பதான்

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்று சொல்லப்படும் செஞ்சூரியனில் அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்த வாய்ப்புள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார். #SAvIND #Ashwin
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கேப் டவுன் ஆடுகளத்தில் பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங்கும் இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 2-வது டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் டெஸ்டிற்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    வழக்காக செஞ்சூரியன் ஆடுகளத்தில் பவுன்ஸ், வேகம் அதிக அளவில் இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சு அதிக அளவில் எடுபடாது. அத்துடன் இந்தியாவை திணறடிக்க ஆடுகளத்தில் சற்று புற்கள் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளோம் என டு பிளிசிஸ் கூறினார்.

    மேலும், இரு அணி கேப்டன்களும் சுழற்பந்து வீச்சு வைக்க வேண்டுமா? அல்லது ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோமா? என்பது குறித்து பேசினார்கள்.

    ஆனால், டாஸ் சுண்டப்பட்ட நேரத்தில் விராட் கோலி ‘‘இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த ஆடுகளம் வேறு, தற்போதைய ஆடுகளம் வேறு. ஆடுகளத்தில் புற்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது’’ என்றார். இதனால் இந்தியா ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஸ்வர் குமாரை நீக்கிவிட்டு இசாந்த் குமாரை சேர்த்தது.



    ஆனால் பந்து வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் மார்கிராம் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார்.

    அஸ்வின் பந்து வீச்சு அதிக அளவில் டர்ன் ஆனது. முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் அஸ்வின்தான் வீழ்த்தினார். இந்நிலையில், செஞ்சூரியன் டெஸ்டில் அஸ்வின்தான் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று இர்பான் பதான் டுவிட் செய்துள்ளார்.

    இந்தியாவின் வேகப்பந்து வீச்சை குறை கூறும் வகையில் அப்படி டுவிட் செய்தாரா? அல்லது பிளாட் பிட்ச் தயார் செய்ததற்காக அப்படி கூறினாரா? என்று தெரியவில்லை. #SAvIND #Ashwin
    Next Story
    ×