search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா சிறப்பான தொடக்கம்- 34 ஓவர் முடிவில் 92-1
    X

    செஞ்சூரியன் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா சிறப்பான தொடக்கம்- 34 ஓவர் முடிவில் 92-1

    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் மார்கிராம் அரைசதத்தால் தென்ஆப்பிரிக்கா சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. #SAvIND #Markram #Ashwin
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். கேப் டவுன் டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட்  ஆகும்.

    இந்திய அணியில் தவான், விக்கெட் கீப்பர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். லீவ் செய்யக்கூடிய பந்தை லீவ் செய்து. அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினார்கள். டீன் எல்கர் நிதானமாக விளையாட மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 26 ரன்னுடனும், மார்கிராம் 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.

    தென்ஆப்பிரிக்கா 34 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 60  ரன்களுடனும், அம்லா 0 ரன்களுடனும்  விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×