search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பெங்களூரு பிளாஸ்டர்சை வீழ்த்தியது ஐதராபாத் ஹண்டர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பெங்களூரு பிளாஸ்டர்சை வீழ்த்தியது ஐதராபாத் ஹண்டர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சை 6-(-1) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் ஹண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. #VodafonePBL #HyderabadHunters #BengaluruBlasters

    ஐதராபாத்:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கடைசி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் ஹண்டர்சும் பெங்களூரு பிளாஸ்டர்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஐதராபாத்தின் சாய் பிரனீத், பெங்களூரு அணியின் சாங் வெய் பெங்கை எதிர்கொண்டார். இதில் சாய் பிரனீத்,  10-15, 15-7, 15-14 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.



    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஐதராபாத்தின் லீ ஹியூன் இல், பெங்களூருவின் சுபங்கர் தேய் ஆகியோர் மோதினர். இந்த போட்டியை ஐதராபாத் துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் லீ ஹியூன் இல், 15-11, 11-15, 15-11 என்ற செட்களில் வெற்றி பெற்றார். 

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கரோலினா மரின், பெங்களூரு அணியின் கிறிஸ்டி கில்மோரை எதிர்த்து விளையாடினார். இதில் 15-9, 15-7 என்ற நேர் செட்களில் கரோலினா மரின் வென்றார்.



    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் ஐதராபாத்தின் மார்கிஸ் கிடோ - யோ இயோன் ஜோடி, பெங்களூரு பிளாஸ்டர்சின் மேத்தியாஸ் போ - கிம் சா ரங் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்தது. இதில் 15-10, 11-15 15-7 என்ற செட்களில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் ஐதராபாத்தின் சத்விக் சாய்ராஜ் - பியா செபாதியா ஜோடி, பெங்களூரு அணியின் மனு அட்ரி - சிக்கி ரெட்டி ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 15-6, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    நேற்று ஒரு போட்டியில் கூட பெங்களூரு அணி வெற்றி பெறவில்லை. இறுதியில் ஐதராபாத் ஹண்டர்ஸ் அணி 6-(-1) என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஐதராபாத் ஹண்டர்ஸ் - டெல்லி டாஷர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் - பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இறுதிப்போட்டி வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. #VodafonePBL #HyderabadHunters #BengaluruBlasters
    Next Story
    ×