search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆல்-ரவுண்டராக ஆஸ்திரேலியாவில் கலக்கிய சச்சின் மகன் அர்ஜூன்
    X

    ஆல்-ரவுண்டராக ஆஸ்திரேலியாவில் கலக்கிய சச்சின் மகன் அர்ஜூன்

    சச்சின் மகன் அர்ஜூன் சச்சின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியுள்ளார். இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இவரும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    சச்சினை விட அதிக உயரம் கொண்டுள்ளதால் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தன்னை தயார்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கூச் பெஹார் தொடரில் மும்பை அணிக்காக களம் இறங்கி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பவ்ரல் கிரிக்கெட் மைதானத்திற்க டான் பிராட்மேன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஹாங்காங்-ஐ மையமாக வைத்து களம் இறங்கிய அணியை எதிர்த்து கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அணி சார்பில் அர்ஜூன் தெண்டுல்கர் விளையாடினார். டி20 போட்டியான இதில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 27 பந்தில் 48 ரன்கள் எடுத்தும் அசத்தினார்.



    ஆல்ரவுண்டராக உருவெடுக்கும் அர்ஜூன், மிட்செல் ஸ்டார்க், பென் ஸ்டோக்ஸ்தான் பிடித்தமான வீரர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அர்ஜூன் கூறும்போது ‘‘நான் ஸ்டிராங்காகவும், சற்று உயரமாகவும் இருந்ததால் சிறு வயது முதலே வேகப்பந்து வீச்சாளராக விரும்பினேன். நான் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால், இநதிய அணியில் இடது கை வேக்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் இல்லை.

    டான் பிராட்மேன் பெயருடைய மைதானத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நம்பமுடியாததாகும். 
    Next Story
    ×