search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே வெளியில் இருப்பதை தென்ஆப்பிரிக்கா விரும்பும்: டொனால்டு சொல்கிறார்
    X

    ரகானே வெளியில் இருப்பதை தென்ஆப்பிரிக்கா விரும்பும்: டொனால்டு சொல்கிறார்

    செஞ்சூரியன் டெஸ்டில் ரகானே வெளியில் இருப்பதை தென்ஆப்பிரிக்கா அணி விரும்பும் என ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார். #SAvIND #Rahane #Donald
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. இதில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 135 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் தலா 16 ரன்கள் எடுத்த தவான் பவுன்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அதேபோல் ரோகித் சர்மாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    வெளிநாட்டு மண்ணில் லோகேஷ் ராகுல், ரகானே ஆகியோர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். கேப் டவுன் டெஸ்டில் அவர்களை வெளியில் வைத்து விட்டு தவான், ரோகித் சர்மாவை களம் இறக்கியதற்கு கடும் விமர்சனம் எழும்பியது. இதனால் விராட் கோலிக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.



    இதனால் நாளைமறுநாள் (சனிக்கிழமை) செஞ்சூரியனில் தொடங்கும் 2-வது போட்டியில் இவர்கள் இருவரும் அணியில் இடம்பிடிப்பார்களா? எந்தெந்த வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு, தவானை மாற்ற வேண்டியதில்லை. ரகானே 12-வது வீரராக கூல்ரிங்ஸ் கொண்டு வந்தால் அதை தென்ஆப்பிரிக்கா அணி ரசிக்கும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஆலன் டொனால்டு கூறுகையில் ‘‘தவான் உண்மையிலேயே ஆக்ரோசமான வீரராக நான் கருதுகிறேன். ஒருவேளை இந்திய அணி அவரை மாற்றினால், தென்ஆப்பிரிக்கா அணி அந்த முடிவை சரியானது என்றே நம்பும். தவான் மாற்றம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். தவான் உலகத்தரம் வாய்ந்த வீரர்.

    அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். ஒரு அதிரடி வீரர் என்பதால், பந்து வீச்சாளர்களின் லெந்த்-ஐ மாற்றக்கூடியவர்.

    ரகானே அணியில் இடம்பிடிக்காதது மிகவும் கடினமானது என நான் நினைக்கிறேன். கடந்த வரும் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா வந்தபோது ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கப்பலை நிலையாக வைத்திருக்க ரகானேயால் முடியும் என்பது எனது பார்வை. அவர் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.

    என்னுடைய பார்வையில் தொடக்க வீரர்களில் மாற்றம் கொண்டு வந்தால், தென்ஆப்பிரிக்கா அணி அது சரி என்று ஏற்றுக்கொள்ளும். ராகுலுக்குப் பதிலாக தவானை அணியில் சேர்த்தால் சிறந்ததாக நினைக்கும். ஏனென்றால் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். 2-வது போட்டியில் தவானை கட்டாயம் களமிறக்க வேண்டும்.



    இந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும். அதேவேளையில் ரகானே 12-வது வீரராக இருந்து கூல்ரிங்ஸ் சுமந்து வந்தால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அது சந்தோசத்தை கொடுக்கும். ரகானே உலகத்தரம் வாய்ந்த வீரர்’’ என்றார். #SAvIND #Rahane #Donald #Dhawan #RohitSharma
    Next Story
    ×