search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது ஹோபார்ட் ஹரிகேன்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #BrisbaneHeat #HobartHurricanes

    பிரிஸ்பேன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. 

    டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் டூலன், டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். டூலன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேத்தீவ் வேட் களமிறங்கினார். அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பென் மெக்டெர்மோட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    மற்றொரு முறையில் சிறப்பாக விளையாடிய ஷார்ட் சதம் அடித்தார். அவரது அதிரடி ஆட்டத்தினால் ஹோபார்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ஷார்ட் 69 பந்துகளில் 122 ரன்கள் ( 8 பவுண்டரி, 8 சிக்ஸர் ) எடுத்து களத்தில் இருந்தார். பிரிஸ்பேன் அணி பந்துவீச்சில் மார்க் ஸ்டெக்கீட், பென் கட்டிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 



    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் ஹீஸ்லெட்டும், பிரெண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்குவித்தனர். மெக்கல்லம் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஹீஸ்லெட் 45 ரன்களில் ஷார்ட் பந்தில் எல்.பி.டபில்யூ ஆனார். 

    அதன்பின் அலெக்ஸ் ரோஸ் - பென் கட்டிங் ஜோடி சேர்ந்தனர். கட்டிங் 4 ரன்னிலும், மார்னஸ் லபுஸ்சாக்னே 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது பிரிஸ்பேன் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து அலெக்ஸ் ரோஸ் - ஜிம்மி பியர்சன் ஜோடி சற்று நிதானமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் அலெக்ஸ் ராஸ் பில்டிங்கிற்கு இடையூறாக செயல்பட்டதல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய மார்க் ஸ்டெக்கீட் 13 ரன்களில் ரன் அவுட் ஆனார். 

    20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹோபார்ட் அணி பந்துவீச்சில் கெமரான் பாயிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 



    சிறப்பாக விளையாடி சதம் அடித்ததோடு, ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹோபார்ட் அணியின் டார்கி ஷார்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது  இடத்தில் நீடிக்கிறது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிட்னி தண்டர் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #BrisbaneHeat #HobartHurricanes
    Next Story
    ×