search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டராவதை காலம்தான் சொல்லும்: கபில்தேவ்
    X

    ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டராவதை காலம்தான் சொல்லும்: கபில்தேவ்

    ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டராவதை காலம்தான் சொல்லும் என்று உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கபில்தேவ் கூறியுள்ளார். #SAvIND #HardikPandya
    சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 16 வருடமாக தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுக்களுடன் 5248 ரன்களும் அடித்துள்ளார். இதில் 8 சதங்களுடன் 27 அரைசதங்கள் அடங்கும். 23 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய கபில்தேவ், இரண்டு முறை 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.

    1978-ம் ஆண்டில் இருந்து 1994-ம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகள் கபில்தேவ் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். இவர் ஓய்விற்குப் பின் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடமுடியவில்லை.

    இந்நிலையில்தான் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அறிமுகமானார். வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுடைய ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கபில்தேவ் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதற்கேற்ப ஹர்திக் பாண்டியாவும் விளையாடி வருகிறார்.



    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், முதல் இன்னி்ங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டராவதை காலம்தான் சொல்லும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

    ஹர்திக் பாண்டியா குறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டர் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும். அதற்கான தகுதியை அவர் பெற்றுள்ளார். தற்போதைய இந்திய அணியை பார்க்கும்போது சரியான காம்பினேசனில் உள்ளது.  எந்த ஒரு வீரரும் ஆல்ரவுண்டராக இருந்தால், கேப்டனுக்கு அது சிறந்ததாகவே இருக்கும். ஹர்திக் பாண்டியா அந்த தகுதியை பெற்றுள்ளார்.



    தற்போதைய இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் நாம் வெளிநாட்டு அணியை பார்த்தோம். தற்போது உலக கிரிக்கெட் இந்தியாவை பார்க்கிறது. இது மிகப்பெரிய மாற்றம். இந்திய அணிக்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் தற்போது செயல்பட்டதை விட சிறப்பாக செயல்படுவார்கள். இந்திய அணி சிறந்த பந்து வீச்சு யுனிட்டை கொண்டுள்ளது’’ என்றார். #SAvIND #HardikPandya
    Next Story
    ×