search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமீயர் பேட்மின்டன் லீக்: சென்னை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது
    X

    பிரிமீயர் பேட்மின்டன் லீக்: சென்னை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியும் சென்னை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.#VodafonePBL #ChennaiSmashers #BengaluruBlasters
    சென்னை:

    பி.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் பேட்மின்டன் ‘லீக்’ போட்டி கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    கவுகாத்தி, டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் இந்தப்போட்டி ஏற்கனவே முடிந்தது.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல் முறையாக பிரிமீயர் பேட்மின்டன் ‘லீக்’ போட்டி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    முதல் போட்டியில் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் 3-2 என்ற கணக்கில் பெங்களூரு பிளாஸ்டர்சையும், 2-வது நாள் ஆட்டத்தில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ் 2-1 என்ற கணக்கில் அகமதாபாத் சுமாஷ் மாஸ்டர்சையும் வீழ்த்தின. 3-வது போட்டியில் ஐதராபாத் ஹன்டர்ஸ் 6-(-1) என்ற கணக்கில் அவாதே வாரியர்சை தோற்கடித்தது.

    நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மா‌ஷர்ஸ்- பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. பி.வி.சிந்து ஒற்றையர் பிரிவில் வென்றார். ஆனால் கலப்பு இரட்டையரில் தோற்றார்.

    ஆனால் இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லாமல் போனது. சென்னை ஸ்மாஷார்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்தப்போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 5 ‘லீக்’ ஆட்டத்தில் விளையாட வேண்டும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    சென்னை அணி 5 ஆட்டத்திலும் விளையாடி விட்டது. இதில் 3 வெற்றி பெற்றது. 2 தோல்வியை தழுவி இருந்தது. 12 புள்ளியுடன் 5-வது இடத்தை பிடித்து அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நேற்றைய போட்டியில் 2 ஆட்டத்தில் தோற்காமல் இருந்தால் சென்னை அணி அரை இறுதி வாய்ப்பில் நீடித்து இருக்கும்.

    பெங்களூர் அணி 4 ஆட்டத்தில் விளையாடி 15 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. ஐதராபாத் 14 புள்ளியுடனும், அவாதே வாரியர்ஸ், அகமதாபாத் சுமாஷ் மாஸ்டர்ஸ் தலா 12 புள்ளியுடன் உள்ளன. இதில் அகமதாபாத்தை தவிர மற்ற 3 அணிகளுக்கும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளன.

    டெல்லி, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் தலா 11 புள்ளியுடனும், மும்பை 10 புள்ளியுடன் இருக்கிறது. இந்த 3 அணிகளுக்கும் ஒரு ஆட்டம் உள்ளன.

    சென்னையில் இன்று நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மும்பை- அகமதாபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்தில் கடைசி சுற்று நடக்கிறது. 10-ந்தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி- நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் 11-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஐதராபாத்- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    12 மற்றும் 13-ந்தேதிகளில் அரை இறுதியும், 14-ந்தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது. #tamilnews
    Next Story
    ×