search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்: டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ஸ்மித்
    X

    ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்: டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ஸ்மித்

    இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் 687 ரன்கள் குவித்ததன் மூலம் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்மித். #Ashes #SteveSmith
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. சிட்னியில் இன்றுடன் முடிவடைந்த கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 346 ரன்களும், ஆஸ்திரேலியா 649 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    ஆட்ட நாயகன் விருதை பேட் கம்மின்ஸும், தொடர் நாயகன் விருதை ஸ்மித்தும் பெற்றனர். ஸ்மித் இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 7 இன்னிங்சில் பேட்டிங் செய்த ஸ்மித் 687 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 239 ரன்கள் குவித்த ஸ்மித்தின் சராசரி 137.40 ரன்னாகும்.



    687 ரன்கள் குவித்ததன் மூலம் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 9 இன்னிங்சில் 810 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 680 ரன்கள் குவித்து 2-வது இடத்திலும் டான் பிராட்மேன்தான் இருந்தார். தற்போது ஸ்மித் அவரை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.

    ஆலன் பார்டர் 597 ரன்களும் (6 டெஸ்டில் 11 இன்னிங்ஸ்), ரிக்கி பாண்டிங் 576 (5 டெஸ்ட் 8 இன்னிங்ஸ்) ரன்களும் அடித்துள்ளனர்.
    Next Story
    ×