search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டெஸ்டில் ரகானேயை நீக்கியது தவறு: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் வெஸ்சல்ஸ் கருத்து
    X

    முதல் டெஸ்டில் ரகானேயை நீக்கியது தவறு: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் வெஸ்சல்ஸ் கருத்து

    கேப்டவுன் டெஸ்டில் ரகானேயை நீக்கியது தவறு எனவும் அது அதிர்ச்சி அளிப்பதாகவும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கெப்னர் வெஸ்சல்ஸ் கூறியுள்ளார். #SAvIND #Rahane #Wessels
    கேப்டவுன்:

    வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒரு நாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சிலும் 209 ரன்னில் சுருண்டது. 77 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து இருந்தது. அதனால் அந்த அணி 142 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் உள்ளது.

    இதற்கிடையே நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்னும் 2 நாள் ஆட்டம் இருப்பதால் இந்த டெஸ்டில் முடிவு ஏற்படும். தற்போதுள்ள நிலவரப்படி தென் ஆப்பிரிக்காவுக்கே கூடுதலாக வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து ஆனதால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.

    இதற்கிடையே கேப்டவுன் டெஸ்டில் ரகானேயை நீக்கியது தவறு. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கெப்னர் வெஸ்சல்ஸ் கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ரகானே சிறப்பாக விளையாடக் கூடியவர். முந்தைய போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரை முதல் டெஸ்டில் நீக்கியது தவறு. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அடுத்த 2 டெஸ்டில் ரகானே இடம் பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இந்த டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் தான் சரியாக ஆடவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக ஆடக்கூடியவர்கள்.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தயார் ஆகவில்லை. இந்திய துணை கண்டத்தில் இருந்து வெளியே ஆடுவது என்பது சவாலானதே.

    ஆனால் ஹர்த்திக் பாண்டியா நல்ல முறையில் செயல்பட்டார். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர் கொண்டு ஆடினார். பந்து வீச்சும் நன்றாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கெப்னர் வெஸ்சல்ஸ் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடி இருக்கிறது. அவர் 40 டெஸ்டில் விளையாடி 2788 ரன் எடுத்து உள்ளார். சராசரி 41.00 ஆகும். 109 ஒரு நாள் போட்டியில் 3367 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.35 ஆகும். 1982, 1994 ஆண்டுவரை அவர் விளையாடி இருக்கிறார்.
    Next Story
    ×