search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    மராட்டிய ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

    மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் காலிறுதி சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, திவிஜ் ஷரன் ஜோடி வெற்றி பெற்றது.
    புனே:

    மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி, முதல் நிலை ஜோடியான ராபர்ட் லிண்ட்ஸ்டெட் (ஸ்வீடன்) - பிரான்கோ ஸ்கூகார் (குரோசியா) ஜோடியை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. அடுத்த சுற்றில் அதிரடியாக விளையாடிய லிண்ட்ஸ்டெட் - ஸ்கூகார் ஜோடி, இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை இந்திய ஜோடி 10-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-5, 2-6, 10-6 என்ற செட்கணக்கில் யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரன் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய ஜோடி, பிரான்சின் பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் - கில்லிஸ் சைமன் ஜோடியை எதிர்கொள்கிறது.



    ஒற்றையர் காலிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மற்றும் முதல் நிலை வீரரான மரின் சிலிச் (குரோஷியா), பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் (பிரான்ஸ்) உடன் மோதினார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிலிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் - கஜகஸ்தானின் மிக்கெல் குகுஷ்கினை எதிர்கொண்டார். இதில் 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். #YukiBhambri #DivijSharan #Maharastraopen
    Next Story
    ×