search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: லக்னோ அவாதே வாரியர்சை 3-0 என வீழ்த்தியது மும்பை ராக்கெட்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: லக்னோ அவாதே வாரியர்சை 3-0 என வீழ்த்தியது மும்பை ராக்கெட்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் லக்னோ அவாதே வாரியர்சை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை ராக்கெட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    லக்னோ:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    மூன்றாவது சுற்று ஆட்டங்கள் லக்னோ நகரில் 1-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அவாதே வாரியர்சும், மும்பை ராக்கெட்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மும்பையின் சன் வான்-ஹோ ஆகியோர் மோதினர். இதில் 15-13, 13-15, 15-4 என்ற செட்கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோ வாரியர்ஸ் அணியின் ஹர்ஷித் அகர்வால், மும்பையின் சமீர் வர்மா ஆகியோர் மோதினர். இதில் சமீர் வர்மா, 15-6, 15-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்னோ அணியின் சாய்னா நேவால், மும்பை அணியின் சாங் பெய்வனை எதிர்த்து விளையாடினார். இதில் 8-15, 15-10, 15-13 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் லக்னோவின் ஆர் சின் சங் - ஹெண்ட்ரா செட்டிவன் ஜோடி, மும்பையின் லீ யாங் டே - டான் பூன் ஹியாங் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியை மும்பை அணி துருப்பு ஆட்டமாக எடுத்து விளையாடியது. இதில், 15-13, 15-12 என்ற நேர் செட்களில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை தட்டிச்சென்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் லக்னோவின் கிறிஸ்டினா பெடர்சன் - தாங் சுன் மென் ஜோடி, மும்பை அணியின் கேப்ரியலா ஸ்டோயிவா - லீ யாங்-டே ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியை லக்னோ துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் 15-10, 14-15, 15-7 என்ற செட்களில் மும்பை அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டிகளின் முடிவில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று முதல் சென்னை சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றைய போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. #PBL #MumbaiRockets #AwadheWarriors
    Next Story
    ×