search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: சென்னை ஸ்மாஷர்சை 3-0 என வீழ்த்தியது டெல்லி டாஷர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: சென்னை ஸ்மாஷர்சை 3-0 என வீழ்த்தியது டெல்லி டாஷர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷர்சை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டெல்லி டாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. #PBL #DelhiDashers #ChennaiSmashers
    லக்னோ:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    மூன்றாவது சுற்று ஆட்டங்கள் லக்னோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷர்சும், டெல்லி டாஷர்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லியின் தியான் ஹோவே, சென்னையின் தனோங்சக் சீன்சோம்பூன்சக் ஆகியோர் மோதினர். இதில் ஹோவே, 15-14, 15-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.


    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி டாஷர்ஸ் அணியின் வாங் விங் கி வின்செண்ட், சென்னையின் பிரைஸ் லெவர்டெஸ் ஆகியோர் மோதினர். இதில் வின்செண்ட், 15-10,15-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பி.வி.சிந்து, டெல்லி அணியின் சங் ஜி-ஹியுனை எதிர்த்து விளையாடினார். இதில் 11-15, 15-13, 15-14 என்ற செட்களில் சங் ஜி-ஹியுன் வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் சுமீத் ரெட்டி - லீ யங் ஜோடி, டெல்லியின் இவான் சோசோனவ் - விளாடிமிர் இவனோவ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 15-13, 15-11 என்ற நேர் செட்களில் சென்னை அணி வெற்றி பெற்றது.


    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் கிறிஸ் அட்காக் - கேப்ரியல் அட்காக் ஜோடி, டெல்லி அணியின் விளாடிமிர் இவனோவ் - அஸ்வினி போபண்ணா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியின் போது கேப்ரியல் அட்காக் காலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. இதனால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டிகளின் முடிவில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி டாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டிகளில் லக்னோ அவாதே வாரியர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் விளையாட உள்ளன. #PBL #DelhiDashers #ChennaiSmashers
    Next Story
    ×