search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியில் ரி‌ஷப்பான்ட், ஷிரேயாஸ் அய்யர் தக்கவைப்பு?
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியில் ரி‌ஷப்பான்ட், ஷிரேயாஸ் அய்யர் தக்கவைப்பு?

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெலில்ஸ் அணி ரிசப்பண்ட், ஷிரோ யாஸ் அய்யர் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது.

    ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ‘மேட்ச்’ கார்டு சலுகையை பயன்படுத்தியும் பெற இயலும். தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரத்தை வருகிற 4-ந்தேதிக்குள் அணி நிர்வாகம் ஐ.பி.எல். அமைப்பிடம் சமர்பிக்க வேண்டும்.

    2 ஆண்டு தடைக்கு பிறகு பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்துக் கொள்கிறது. பிராவோ மேட்ச் கார்டு மூலம் தேர்வு பெறலாம்.

    டெல்லி டேர்டெலில்ஸ் அணி ரிசப்பண்ட், ஷிரோ யாஸ் அய்யர் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது.

    ரோகித் சர்மா, ஹார்த்திக், பாண்டியா, குனால் பாண்டியா ஆகியோர் மும்பை அணியில் தக்க வைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.



    இதே போல ஐதராபாத் அணியில் வார்னர், தீபக்ஹீடா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவன் சுமித் கடந்த 2 போட்டியில் ரைசிங் புனே அணியில் ஆடினார். அவர் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெறலாம். அவர் ஏற்கனவே அந்த அணிக்காகவே ஆடி இருந்தார்.

    ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் மார்ஷ் இந்த ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் சர்ச்சைக்குரிய பென்ஸ்டோக்ஸ் ஐ.பி.எல்.லில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    ஒவ்வொரு அணியும் இந்த முறை வீரர்களின் ஏலத்துக்கு ரூ.80 கோடி வரை செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த முறையை விட ரூ.14 கோடி கூடுதலாகும். கடந்த தடவை ரூ.66 கோடி அனுமதிக்கப்பட்டு இருந்தது.
    Next Story
    ×