search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
    X

    மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் ராம்குமார் ஸ்பெயினின் ராபர்ட்டோ கார்பல்லேசை விழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    மும்பை:

    சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த ஜூலை மாதம் திடீரென மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வர்த்தக நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மராட்டிய ஓபன் டென்னிஸ் என்ற புதிய பெயருடன் இந்த போட்டி புனேயில் உள்ள பலேவாடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் ராபர்ட்டோ கார்பல்லேசுடன் மோதினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ராம்குமார் அபாரமாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

    இதேபோல் இரண்டாவது செட்டிலும் ராம்குமாரின் கையே ஓங்கியிருந்தது. அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்பெயின் வீரர் கார்பல்ஸ் சரணடைந்தார். இதையடுத்து, இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ராம்குமார் 7-6(4), 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.  இதைத்தொடர்ந்து அடுத்த சுற்றில் குரோஷியா வீரர் மரின் லின்சசுடன் ராம்குமார் மோதுகிறார்.
    Next Story
    ×