search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    90 மைல் வேகப்பந்து வீச்சு, பெரிய செஞ்சூரி இருந்தால் மட்டுமே ஆஷஸ் கோப்பை: ஆண்டர்சன்
    X

    90 மைல் வேகப்பந்து வீச்சு, பெரிய செஞ்சூரி இருந்தால் மட்டுமே ஆஷஸ் கோப்பை: ஆண்டர்சன்

    90 மைல் வேகப்பந்து வீச்சாளர்களும், பெரிய செஞ்சூரி அடிக்கும் பேட்ஸ்மேன்களும் இருந்தால்தான் ஆஸி. மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல முடியும் என ஆண்டர்சன் கூறியுள்ளார். #Ashes #AUSvENG
    இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். ஆண்டர்சன் 522 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சர்வதேச அளவில் 5-வது இடத்தில் உள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 398 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 15-வது இடத்தில் உள்ளார்.

    இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளது. இங்கிலாந்து ஆடுகளத்தில் இருவரும் ராஜாக்கள். இவர்களது ஸ்விங் பந்தை எதிர்கொள்வது சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்தை விட்டு வெளியே செல்கின்றபோது திணறுகிறார்கள். இவர் நன்றாக பந்தை ஸ்விங் செய்யும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இவர்களால் தொடர்ச்சியாக பந்து வீச முடியாது.

    தற்போது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். ஆடுகளத்தில் ஸ்விங் அதிக அளவில் இல்லாததாலும், பவுன்சஸ்கு சாதகமான ஆடுகளத்தில் 140 கி.மீட்டருக்கு மேல் வீச முடியாததும்தான் இதற்கு காரணம். மேலும் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் எந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட இன்னிங்ஸ் விளையாடவில்லை.

    இந்நிலையில் 90 மைல் வேகத்திற்கு மேல் பந்து வீசும் பவுலர்களும், பெரிய செஞ்சூரி அடிக்கும் பேட்ஸ்மேன்களும் இருந்தால்தான் அடுத்த ஆஷஸ் தொடரை கைப்பற்ற முடியும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கவில்லை.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘58 அல்லது 59-வது ஓவரில் என்னுடைய வேகம் குறைந்தது என்பது எனக்குத் தெரியும். நான் பந்து வீசிய பின் எனது பந்து என்ன வேகத்தில் சென்றது என்பதை பார்ப்பேன். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் அந்த பந்துகளில் எத்தனை ரன்கள் எடுப்பார் என்பதையும் பார்ப்பேன். நான் வேகமாக பந்து வீச முயற்சி செய்தேன். ஆனால், ஆடுகளம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

    அங்குள்ளவர்கள் என்னிடம், உங்களால் கூக்கபுர்ரா பந்தில் வேகமாக பந்து வீச முடியாது என்று கூறினார்கள். அது அவர்கள் பார்வை என்று நான் கூறினேன்.

    ஆனால் ஸ்டார்க் போன்ற வீர்ரகள் அல்லது 90 மைல் வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுக்கள் கிடைக்கும். 90 மைல் வேகத்திற்கு மேல் பந்து வீசும் நபரை நாங்கள் பெற்றிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும். இது ஒரு முக்கியமான காரணி.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுகுறித்து யோசிப்பது காலதாமதமானது. இருந்தாலும் நான் 5 கி.மீட்டர் வேகத்தை கூட்டினால் சிறந்ததாக இருக்கும்.

    அதேபோல் எங்களது அணி வீரர்கள் பெரிய செஞ்சூரி அடிப்படி அவசியமானது. நாம் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தோம் என்றால், ஒரு அணி வெற்றி பெற்றிக்கிறது அல்லது உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றால், அந்த அணியின் ஒரு வீரர் பெரிய செஞ்சூரி அடித்திருப்பார். மெல்போர்னில் அலஸ்டைர் குக் இரட்டை சதம் அடித்திருந்தார். இருந்தாலும் வெற்றி பெற முடியாமல் போனது’’ என்றார்.
    Next Story
    ×