search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் கைவிடப்பட்டது நியூசி.- வெ.இண்டீஸ் டி20 போட்டி: முன்ரோ அதிரடி வீண்
    X

    மழையால் கைவிடப்பட்டது நியூசி.- வெ.இண்டீஸ் டி20 போட்டி: முன்ரோ அதிரடி வீண்

    மழையால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் நியூசிலாந்து 9 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கைவிடப்பட்டது. #NZvWI #ColinMunro
    நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    மார்ட்டின் கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் கொலின் முன்ரோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த முன்ரோ 23 பந்தில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.



    இவரது அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து 9 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டது. குறிக்கிட்ட மழை நீண்ட நேரம் நீடித்ததால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டது.



    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 3-ந்தேதி (நாளைமறுநாள் நடக்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-0 எனக்கைப்பற்றும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் 1-1 எனத் தொடரை சமன் செய்யும்.
    Next Story
    ×