search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடர் தான் கோலிக்கு உண்மையான சவால்: பி‌ஷன் சிங்பெடி சொல்கிறார்
    X

    தென்ஆப்பிரிக்கா தொடர் தான் கோலிக்கு உண்மையான சவால்: பி‌ஷன் சிங்பெடி சொல்கிறார்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தான் விராட் கோலிக்கு உண்மையான சவால் என்று முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம் பவானுமான பி‌ஷன் சிங்பெடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தான் விராட்கோலிக்கு உண்மையான சவால் என்று முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம் பவானுமான பி‌ஷன் சிங்பெடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக அளவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமான நிலையில் உள்ளார். ஆனால் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெளி நாடுகளில் போராடுகிறது.

    உள்ளூரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு தென்ஆப்பிரிக்க பயணம் கடும் போட்டியாக இருக்கும். இந்த தொடர் தான் விராட்கோலிக்கு உண்மையான சவாலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது கிடையாது. 2010-11-ம் ஆண்டு தொடர் மட்டுமே சிறப்பாக இருந்தது. இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு விளையாடிய 10 தொடரிலும் இந்தியா தொடரை இழந்தது கிடையாது.

    வங்காள தேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது. அதன்பிறகு நடந்த 9 டெஸ்ட் தொடரை விராட்கோலி தலைமையிலான அணி தொடர்ச்சியாக கைப்பற்றி முத்திரை பதித்தது. இதில் 7 தொடர் இந்திய மண்ணில் கைப்பற்றியது. மீதியுள்ள 2 தொடரை வெஸ்ட்இண்டீஸ், இலங்கையில் வென்றது.

    தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் இந்திய அணியின் சாதனை தென்ஆப்பிரிக்காவிலும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடும் சவால் நிறைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
    Next Story
    ×