search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டும்: ரகானே
    X

    தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டும்: ரகானே

    அஸ்வின் மற்றும் ஜடேஜா தென்ஆப்பிரிக்காவில் தங்களது பந்துவீச்சு முறையை மாற்றும் பட்சத்தில் அங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே கூறியுள்ளார்.
    கேப்டவுன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே கூறியதாவது:-



    அஸ்வின், ஜடேஜா சுழற்பந்து வீச்சில் ஜாம்பவான்கள். இருவரும் இந்திய மண்ணில் மிகவும் சிறப்பாக பந்துவீசி வெற்றிகளை பெற்று தந்து இருக்கிறார்கள்.

    அஸ்வினும், ஜடேஜாவும் இந்தியாவில் பந்துவீசுவதை போல வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக பந்துவீச இயலும். மொய்ன் அலி, நாதன் லயன் ஆகியோர் இங்கிலாந்தில் ஒரு முறையிலும், ஆஸ்திரேலியாவில் வேறு முறையிலும் பந்துவீசுவதை பார்க்க முடிகிறது.

    இதேபோல அஸ்வின் மற்றும் ஜடேஜா தென்ஆப்பிரிக்காவில் தங்களது பந்துவீச்சு முறையை மாற்றும் பட்சத்தில் அங்கு சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு அவர்கள் தங்களின் பந்துவீச்சு திறன் முறை, அதன் வேகம் ஆகியவற்றில் மாற்றம் செய்யவேண்டும்.

    11 பேர் கொண்ட அணியில் அவர்கள் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ களத்தில் இருந்தால் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மையான சிந்தனைகள் இருக்கும் ஆட்டத்தை ரசித்து விளையாடுமாறு அவர் கூறுவார்.

    ஒரு வீரர் மோசமாக விளையாடினால் அவருக்கு ரவிசாஸ்திரி ஆதரவாக இருந்து அவருக்கு நேர்மையான சிந்தனைகளை ஏற்படுத்தி அவரை மேம்படுத்துகிறார்.

    இதேபோல கேப்டன் விராட் கோலியும் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவானவர். உங்கள் விருப்பபடி ஆடுங்கள் உங்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன். முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம்” என்று எப்போதும் கூறுவார்.

    இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.
    Next Story
    ×