search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2017-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மகத்தான சாதனை: 14 தொடர்களை வென்றது
    X

    2017-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மகத்தான சாதனை: 14 தொடர்களை வென்றது

    2017 ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி 16 தொடர்களில் விளையாடி, 14 தொடர்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு 2017-ம் ஆண்டு மிகவும் மகத்துவம் பெற்றதாக இருந்தது. இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடரை இழக்காமல் சாதனை படைத்துள்ளது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளில் இந்திய அணி இந்த ஆண்டில் 16 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில் 14 தொடர்களை கைப்பற்றி உள்ளது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் சமநிலையில் முடிந்தது.

    இந்திய அணி இந்த ஆண்டில் 4 டெஸ்ட் தொடரில் விளையாடி நான்கிலும் வென்றது. இலங்கைக்கு எதிராக 2 முறை வென்றது. வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடரை கைப்பற்றியது.

    ஒருநாள் போட்டியை பொறுத்தவரை 6 தொடர்களையும் வென்றது. இலங்கைக்கு எதிராக 2 முறையும், இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா,நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 1 முறையும் தொடரை கைப்பற்றியது. நேரடியான தொடர் இல்லாத சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை 4 தொடரை (இலங்கை 2, இங்கிலாந்து1, நியூசிலாந்து 1) கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுடன் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இந்த ஆண்டில் 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 37 வெற்றிகளை பெற்றது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற 2-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    ஆஸ்திரேலியா 2003-ம் ஆண்டு 38 வெற்றியை பெற்று இருந்தது.

    இந்திய அணி இந்த ஆண்டில் 11 டெஸ்டிலும், 29 ஒருநாள் போட்டியிலும், 13 இருபது ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்றது.

    2018-ம் ஆண்டின் தொடக்கம் இந்தியாவுக்கு சவால் நிறைந்தது. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவுடன் அந்நாட்டு மண்ணில் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது. டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

    Next Story
    ×