search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: டெல்லி டாஷர்சை 4-1 என வீழ்த்தியது மும்பை ராக்கெட்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: டெல்லி டாஷர்சை 4-1 என வீழ்த்தியது மும்பை ராக்கெட்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் டெல்லி டாஷர்சை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை ராக்கெட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    கவுகாத்தி :

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் டெல்லி டாஷர்சும், மும்பை ராக்கெட்ஸ் அணியும் மோதின.  

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி டாஷர்ஸ் அணியின் வாங் விங் கி, மும்பை ராக்கெட்ஸ் அணியின் சமீர் வெர்மாவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தை டெல்லி அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்தது. இதில் சமீர் வெர்மா, 15-11, 15-11 என்ற நேர் செட்களில் வென்றார். இதனால் டெல்லி அணி இரண்டு புள்ளிகள் கூடுதல் புள்ளிகள் வெல்லும் வாய்ப்பை இழந்தது.



    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லியின் தியான் ஹோவே, மும்பையின் சன் வான்-ஹோ ஆகியோர் மோதினர். இதில் தியான், 13-15, 15-13, 15-9 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் சங் ஜி-ஹியுன், மும்பை ராக்கெட்ஸ் அணியின் சாங் பெய்வன்னை எதிர்த்து விளையாடினார். இதில் 12-15, 15-14, 15-9 என்ற செட்களில் டெல்லியின் சங் ஜி-ஹியுன் வெற்றி பெற்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் டெல்லியின் இவான் சோசோனவ் - விளாடிமிர் இவனோவ் ஜோடி, மும்பையின் டன் பூன் ஹியாங் - லீ யாங்-டே ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 14-15, 15-14, 15-10 என்ற செட்கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது.



    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் டெல்லி அணியின் பிரனவ் சோப்ரா - ஆர்த்தி சாரா சுனில் ஜோடி, மும்பையின் லீ யாங்-டே - கேப்ரியலா ஸ்டோயிவா ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியை மும்பை அணி துருப்பு ஆட்டமாக தேர்வு செய்தது. இப்போட்டியில், 15-11, 15-9 என்ற நேர் செட்களில் மும்பை ஜோடி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை தட்டிச்சென்றது.

    நேற்றைய போட்டிகளில் முடிவில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற மும்பை ராக்கெட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இன்று நடைபெறும் போட்டிகளில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
    Next Story
    ×