search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை போட்டி: இந்திய ஜூனியர் அணிக்கு விராட் கோலி அறிவுரை
    X

    உலக கோப்பை போட்டி: இந்திய ஜூனியர் அணிக்கு விராட் கோலி அறிவுரை

    ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலககோப்பை போட்டி வருகிற ஜனவரி 13-ந்தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து விராட் கோலி கூறும் போது: 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டி எனது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல் ஆகும். இப்போட்டி எங்களது வளர்ச்சிக்காக நல்ல தளம் அமைத்துக் கொள்ள உதவியாக இருந்துள்ளது. அந்த போட்டியில் இருந்தே எங்களது எதிர்காலம் மாற தொடங்கியுள்ளது. அந்த போட்டி வழங்கும் வாய்ப்புகளை உணர்ந்து அதை மதித்து தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மேலும் 2008-ம் ஆண்டில் விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டி அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், 'கேன் வில்லியம்சனிற்கு எதிராக விளையாடியது இன்னமும் நினைவில் உள்ளது. ஒட்டுமொத்த அணியில் மற்ற வீரர்களை விட கேன் வித்தியாசமாக தெரிந்தார். அவரது பேட்டிங் திறன் மற்ற வீரர்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருந்தது' என அவர் தெரிவித்தார்.



    நானும் ஸ்டீவ் ஸ்மித்தும் U19 போட்டிகளில் ஒருவருக்கு எதிராக அதிகம் விளையாடியது கிடையாது, அதனால் அவரது பேட்டிங் முறையை நான் பார்த்ததில்லை. தனது கிரிக்கெட் வாழ்வில் அவர் அதிக அனுபவம் கொண்டவர். குறிப்பிட்ட குழுவினரில் இருந்து அதிகம் பேர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

    குழுவில் மூன்று பேர் மட்டும் அவரவர் நாட்டு கேப்டன்களாக இருந்தாலும், மற்றவர்கள் தங்களது நாட்டு அணிகளுக்காக விளையாடியுள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார். விராட் கோலி மட்டுமின்றி நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும் ஐ.சி.சி. U19 போட்டிகளின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×