search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20-யில் அதிக கேட்ச்: டி வில்லியர்ஸ்-ஐ முந்தினார் டோனி
    X

    டி20-யில் அதிக கேட்ச்: டி வில்லியர்ஸ்-ஐ முந்தினார் டோனி

    இலங்கைக்கு எதிரான நேற்றைய முதல் டி20 போட்டியில் நான்கு பேரை அவுட்டாக்கியதன் மூலம் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை டோனி முறியடித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக்கில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 48 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார். டோனி 22 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 87 ரன்னில் சுருண்டது. இதில் டோனி நான்கு வீரர்கள் அவுட்டாக காரணமாக இருந்தார். திசாரா பெரேரா, குணரத்னே ஆகியோரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். உபுல் தரங்கா, குசால் பெரேரா ஆகியோரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.



    இதன் மூலம் 84 டி20 போட்டியில் 74 பேரை வீழ்த்தி தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பரான டி வில்லியர்ஸ் சாதனையை முந்தியுள்ளார். டி வில்லியர்ஸ் 78 போட்டிகளில் 72 பேர் அவுட்டாக காரணமாக இருந்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் டோனி 272 போட்டிகளில் 201 பேரை அவுட்டாக்கியுள்ளார். பாகிஸ்தான் கீப்பர் கம்ரான் அக்மல் 211 போட்டிகளில் 207 பேரை அவுட்டாக்கி முதல் இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×